Daily Horoscope
✕

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (13:54 IST)
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இறுதி வாதம் இன்று முடிவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அவர்களிடம் சென்றது.  சத்தியநாராயணன் தலைமையில் இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.
 
இந்த வழக்கின் இறுதி வாதம் இன்று நடைபெற்றது. அனைத்து தரப்பினரின் வாதம் முடிந்த பின், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார்.

எல்லாம் காட்டு

பஸ்ல போகும் ஆண்களின் நிலைமை கொடுமை!.. தாய்மாமன் புகழ் ஓங்குக!.. புளூசட்ட மாறன் நக்கல்...

தமிழக அரசின் வெற்றுப் பண்ண திட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ் டீலர்ஸ் எல் எஸ் எஸ் மற்றும் புறநகர் பெருந்துக்களிலும் பெண்களுக்கு இலவச பயணம்

அரசின் தலைவராக 25 ஆண்டுகள்!.. நரேந்திர மோடி சாதனை...

கூகுள் பிக்சல் 10a ஸ்மார்ட்போன் விலை ரூ. 6,000 அதிரடி உயர்வு..இந்தியாவில் இன்றைய விலை என்ன?

ஆகாஷவாணி பவனில் அனுமதி இன்றி நுழைந்து போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments