”மீன் சாப்பிட்டா கேன்சர் வராது”..டாக்டராக மாறிய ஜெயகுமார்
மீன் சாப்பிடால் கண் பார்வை கோளாறு, புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் வராது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
வீராணம் ஏரியில் புதிய மீன் வகைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்ட நிலையில், இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்தார். அப்போது, கட்லா, ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்கள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாகவும், புதிய வகை மீன்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், அவர் மீன் சாப்பிட்டால் பார்வை கோளாறு, புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் வராது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.