வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (15:41 IST)

விமான நிலையத்தில் ரூ.57.93 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தாள்கள் பறிமுதல்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அனுமதியின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.57.93  லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் மற்றும் சிறு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
 
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட தயாராக இருந்த பேட்டிக் ஏர்வேஸ் விமானத்தில் செல்ல விழுந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத் துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனைக்குள் படுத்தினார். 
 
இதில் பயணி ஒருவர் உரிய அனுமதியின்றி பல்வேறு வெளிநாட்டு பணத்தாள்களை உடைமைகளுக்குள் மறைத்து எடுத்து செல்ல இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் பயணியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
 
இதன் மதிப்பு ரூ.49.11 லட்சம் ஆகும். 
இதேபோல் மற்றொரு பயணி 124 கிராம் எடையில் 552 எண்ணிக்கையிலான சிறு சிறு மூக்குத்திகள், தோடுகள் உள்ளிட்டவற்றை உடைமைகளுக்குள் மறைத்து கடத்திச் செல்லவிருந்தது தெரியவந்தது. அவற்றையும் பறிமுதல் செய்து பயணியிடம் விசாரித்து வருகின்றனர்.
 
பறிமுதல் செய்த நகைகளின் மதிப்பு ரூ.8.82 லட்சமாகும்.
இதன்படி மொத்தம் ரூ.57.93 லட்சம் மதிப்பிலான நகைகள் பணத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.