புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 19 ஜூன் 2016 (09:06 IST)

கல்வித் தந்தை ஜேப்பியார் திடீர் மரணம்

கல்வித் தந்தை ஜேப்பியார் திடீர் மரணம்

சத்தியபாமா கல்விக் குழுமங்களின் தலைவர் ஜேப்பியார் மரணம் அடைந்தார்.
 

 
சத்தியபாமா கல்விக்குழுமங்களின் தலைவர் ஜேப்பியார் (85) சென்னையில் கல்வித் தந்தை என்று அழைக்கப்படுகிறைார். மேலும், சமூக சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
 
இந்த நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் சத்தியபாமா பல்கலை வளாக வீட்டில் வசித்து வந்த அவருக்கு நேற்று மீண்டும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
 
இதனையடுத்து, உடனே தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அலிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
 
அவரது மறைவுக்கு பல்வேறு கல்விக் குழுமங்களின் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக சேவர்களும் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.