செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2016 (17:11 IST)

6 மணிக்கு ஜெயலலிதா விஷயம் தெரியவரும்: சுப்ரமணியன் சுவாமி தகவல்!

6 மணிக்கு ஜெயலலிதா விஷயம் தெரியவரும்: சுப்ரமணியன் சுவாமி தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று மலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.


 
 
மாரடைப்பு ஏற்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். உயிர் காக்கும் கருவிகளுடன் உலகின் அதிநவீன சிகிச்சை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்து மிக மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் கூறிவருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தலைநகர் சென்னை உள்ளது.


 
 
பல்வேறு தலைவர்கள் சென்னை நோக்கி விரைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் மாலை 6 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா பற்றிய விஷயத்தை பிரதமர் மோடி வெளியிடுவார் எனவும் ஒருவேளை அது 11 மணிக்கு கூட தள்ளிப்போகலாம் என கூறியுள்ளார்.