செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (16:31 IST)

ஜெயலலிதா நைட்டியில் உள்ள புகைப்படம்: முன்னரே அனுமதித்தாரே!

ஜெயலலிதா நைட்டியில் உள்ள புகைப்படம்: முன்னரே அனுமதித்தாரே!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்தார். பெரும் மர்மங்கள் நிறைந்த அவரது மரணம் குறித்த சர்ச்சைகள் இன்று வரை நீடிக்கிறது.


 
 
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நாங்கள் கூறியது அனைத்தும் பொய், நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. எங்களை மன்னித்துவிடுங்கள் என மக்கள் மத்தியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததையடுத்து ஜெயலலிதா விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
 
இதனையடுத்து பேட்டியளித்த தினகரன் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவரை வீடியோ எடுத்ததாகவும், அதில் அவர் எடை குறைந்து நைட்டி உடையில் இருந்ததால் அந்த வீடியோவை வெளியிடவில்லை எனவும், சசிகலாவின் ஆலோசனைக்கு பின்னர் அதனை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். மேலும் விசாரணை கமிஷனில் அந்த வீடியோ அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
 
ஜெயலலிதா நைட்டி உடையில் இருந்ததால் அதனை வெளியிடவில்லை என தினகரன் கூறியதற்கு பதிலடியாக இதற்கு முன்னர் ஜெயலலிதா உடல் நலமில்லாமல் இருந்தபோது நைட்டியில் புகைப்படம் எடுக்க அனுமதித்தாரே அது இணையங்களில் தற்போதும் வருகிறதே என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
 
மேலும் உடல் எடை குறைந்ததாக தினகரன் சொல்லும் நிலையில் மரணமடைந்தபின் ஜெயலலிதாவின் உடல் பழைய தோற்றத்திலேயே இருந்ததன் எம்பார்மிங் ரகசியங்களும் சர்ச்சைக்கு உள்ளாகின்றன.