சசிகலாவின் கட்டுபாட்டில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன்?
சசிகலாவின் கட்டுபாட்டில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன்?
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு அவரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சசிகலா தன்னை தடுப்பதாக பேட்டியளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
ஜெயலலிதாவின் இரத்த உறவான தீபாவுக்கு அப்பல்லோவில் அனுமதி மறுக்கப்பட்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதில் சசிகலா மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அப்பல்லோவில் சசிகலாவின் அறையில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் வெளியான செய்தியில் இந்த தகவல் உள்ளது. அதில், சசிகலாவுக்கு எதிராக தீபா ஏதாவது பிரச்சனை செய்தால் அதனை தீபக்கை கொண்டு முறியடிக்க திட்டமிட்டிருப்பதாகவும், அவர் ஜெயலலிதாவின் இரத்த உறவு என்பதால் தீபக்கை சசிகலா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தீபக் மூலம் சசிகலா தரப்பு ஏதாவது செய்தால் அதனை எதிர்க்கவும் தீபா தரப்பு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.