Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வின் பிறந்த நாள் விழா பிப்ரவரி 29? - அட அப்ரசண்டிகளா!

Updated: சனி, 24 பிப்ரவரி 2018 (14:37 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். 

 
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜெ.வின் பிறந்தநாள் தொடர்பான போஸ்டர்களும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொள்ளும் ஒரு விழா தொடர்பான ஒரு பேனரில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா 29.02.2018 அன்று கொண்டாடப்படுகிறது என அச்சடிக்கப்பட்டுள்ளது.
 
பிப்ரவரி 29 என்பது லீப் வருடத்தில் அதாவது 4 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. இந்த மாதம் 28ம் தேதியோடு முடிவடைகிறது. அப்படி இருக்க, பிப்ரவரி 29ம் தேதி என அச்சடிக்கப்பட்டுள்ள விவகாரம் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
 
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எல்லாம் காட்டு

வரவு குறைவு, செலவு அதிகம்.. தமிழக அரசிடம் ஒத்துழைப்பில்லை.. திணறும் சென்னை மாநகராட்சி...

லண்டனில் 38, 44வது இடங்களை பிடித்த அஜித்திம் டீம்!.. இதுக்குதான் இவ்ளோ பில்டப்பா!..

முதலீட்டை ஈர்க்க விஜய் லண்டன் போகல.. வேற ஒன்னு ஓடிக்கிட்டிருக்கு!.. பழனிச்சாமி நக்கல்!...

அஜித்தை வைத்து திமுக செய்த அரசியல்!.. ஆனா ரிசல்ட் இப்படி ஆகிப்போச்சே!.

சீமான் முதலில் கவுன்சிலர் ஆகட்டும்!.. அமைச்சர் ரமேஷ் கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments