1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மே 2024 (14:04 IST)

ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர்: தமிழிசை சௌந்தரராஜன்

ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றும், ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
 
கரசேவையை காரணம் காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா என்றும், ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம் என்றும், ஜெயலலிதாவை அதிமுகவினர் தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர் என்றும், இன்று ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
 
மேலும் பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜெயலலிதா என்றும், நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் ஜெயலலிதா என்றும் அவர் கூறினார்.
 
ஏற்கனவே ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு ஜெயகுமார், சசிகலா உள்ளிட்டோர்  கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது தமிழிசை சௌந்தரராஜன் அதே கருத்தை கூறியுள்ள நிலையில் அதிமுக தரப்பில் இருந்து என்ன ரியாக்ஷன் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran