Daily Horoscope
✕

எஸ்.வி.சேகரின் ஜெயில் ஆசையை அதிமுக நிறைவேற்றும்! – ஜெயக்குமார் எச்சரிக்கை!

Written By Prasanth Karthick
Updated: புதன், 12 ஆகஸ்ட் 2020 (13:41 IST)
எஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல ஆசைப்பட்டால் அதிமுக அவரது ஆசையை நிறைவேற்றும் என அமைச்சர் ஜெயக்குமார் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் தேசிய கொடி குறித்தும், தமிழக முதல்வர் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி “எஸ்.வி.சேகர் வழக்கு தொடர்ந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்” என பேசியிருந்த நிலையில், முதல்வர் குறித்து எஸ்.வி.சேகர் அவதூறாக பேசியதாக சென்னை குற்றவியல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒருமுறை இவ்வாறாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு எஸ்.வி.சேகர் தலைமறைவான நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “எஸ்.வி.சேகர் தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எஸ்.வி.சேகர் நீண்ட காலமாக சிறை செல்ல ஆசைப்படுகிறார். அவரது ஆசையை அதிமுக நிறைவேற்றும்” என கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபிராஜ் டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments