புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (16:21 IST)

கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் செய்யும் டகால்டி... போட்டுடைத்த ஜெயகுமார்!

பேரணியில் நடிகர் சங்கத்திற்கும் கமலுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தது ஏன் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 
 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் பாஜக அரசை கண்டித்தும் வருகிற 23 ஆம் தேதி, மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஸ்டாலின், அனைத்து கட்சிகளுக்கும் சங்களுக்கும் கடிதம் ஒன்றையும் எழுதினார்.  
 
அதில், சமூக நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றிற்கு முரணான வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் வருகிற 23 ஆம் தேதி, சென்னையில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி, ஜாதி, மதம் ஆகிய எல்லைகளை கடந்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே இந்த சட்டத்தை திருமப பெற முடியும் என முக ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். 
 
இதனைத்தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கும் பேரணியில் கலந்துக்கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. தற்போது இதை விமர்சித்துள்ளார் அதிமுக அமைச்சர் ஜெயகுமார், அவர் கூறியதாவது, 
 
பேரணிக்கு கூட்டம் வரவேணும். நடிகர்களை கூப்பிட்டால் நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதற்காகவே பேரணியில் பங்கேற்க கமல்ஹாசன் மற்றும் நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.