திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (12:16 IST)

கொரோனாவில் ஹைட் ஆனவர், எலெக்‌ஷனுக்காக வறார்! – ஸ்டாலின் மீது ஜெயக்குமார் விமர்சனம்!

தொடர்ந்து அதிமுக மீது குற்றச்சாட்டுகளை வைத்து வரும் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்காக தற்போது வெளியே வந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆட்சி காலம் முடிய சில மாதங்களே உள்ள நிலையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் திட்ட பணிகளை முடிக்க அதிமுகவும் வேகமாக செயலாற்றி வருகிறது.

இந்நிலையில் நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசின் நடவடிக்கைகளை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து குறை கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் “கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக எதிர்கட்சி தலைவர் வெளியே வரவில்லை. தற்போது தேர்தல் வருவதால் ஓட்டுக்காக வெளியே வந்தவர் அதிமுக மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். ஆனால் அதிமுக கொரொனா காலத்திலும், புயல் காலத்திலும் மக்களுக்கு தேவையான அனைத்தையும் எதையும் பொருட்படுத்தாமல் செய்து வருகிறது” என கூறியுள்ளார்.