Daily Horoscope
✕

யாரும் அசைக்க முடியாது... அசால்ட்டு பண்ணும் ஜெயகுமார் !

Written By Sugapriya Prakash
Updated: சனி, 9 ஜனவரி 2021 (13:24 IST)
அதிமுக ஒரு எக்கு கோட்டை, யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என ஜெயகுமார் கூறியுள்ளார். 

 
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற அமமுக பிரமுகர் சசிகலா தனது தண்டனை காலம் முடிந்து வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 27ம் தேதி விடுதலை உறுதி என்றும் ஆனால் அதற்கு முன்னதாகவே விடுதலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
விடுதலையானதும் சசிக்கலா நேரடியாக மன்னார்குடி செல்வதாகவும் அங்கு சில காலம் ஓய்வெடுத்த பிறகு அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததால் அதிமுக நான்காக உடையும் என சிலர் கூறி வருகின்றனர். அதிமுக உடைவே உடையாது. அது ஒரு எக்கு கோட்டை. யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளார். 

எல்லாம் காட்டு

நவம்பர் 20-ஆம் தேதி முதல் சொகுசு சுற்றுலா கப்பல் இயக்கம்.. 150 பயணிகள் பயணம் செய்யலாம்...

ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு.. பள்ளிக்கல்வி துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை! - நிஷாந்த் சிக்கியது எப்படி?...

கணினி இல்லை.. கோடிங் இல்லை.. வெறும் வாட்ஸ் அப் வைத்து ஏஐ செயலிகள் உருவாக்கம்.. ஐடி வல்லுநர்கள் சாதனை

முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை.. மனைவியை பிரிந்த ஆதவ் அர்ஜுனா..

அடுத்த கட்டுரையில்
Show comments