திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (14:14 IST)

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது: திடீர் பல்டி அடித்த ஜெயக்குமார்!

jayakumar
அதிமுகவின் முன்னணி தலைவர்கள் ஒரு பக்கம் பாஜக மற்றும் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்துவரும் நிலையில் இன்னொரு பக்கம் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது என்றும் கூட்டணி குறித்து அதிமுக எந்த சர்ச்சையுகருத்தும் கூறவில்லை என்றும் தெரிவித்தார். 
 
ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இது குறித்து பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ஜெயலலிதாவுக்கு நிகரான தலைவர் இனி தமிழ்நாட்டில் பிறக்கப் போவது கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran