Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவினரின் கருத்தை ஏற்க முடியாது: ஜெயகுமார் திட்டவட்டம்!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (14:30 IST)
தமிழக பாஜக தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

 
அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பது தொடர்பாக அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் முருகன் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து பாஜக தலைமை தான் அறிவிக்கும் என தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது,  சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என கூறினார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.  கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
’மேலும் மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழக பாஜக தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது. டெல்லி அறிவிப்பே இறுதியானது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

எல்லாம் காட்டு

திமுக We Miss You.. வாங்க சண்டை போடுவோம்!.. சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா பேச்சு..

என்னோட பாடி லாங்வேஜ்ல உள்நோக்கம் இல்லை!.. தப்பா எடுத்துக்காதீங்க!.. விஜய் டிவிட்!...

பட்ஜெட் அனுமதி வாங்காமல் 2000 கோடி ஊழல்!.. ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!...

AI உதவியுடன் இளமையாக மாற உருவான மருந்து: சில வாரங்களில் வயதை குறைக்கலாமா?

இரண்டடுக்கு ரஷ்ய ரயிலின் வித்தியாசமான அனுபவம்: இந்திய பெண் பயணி பகிர்ந்த வீடியோ வைரல்

அடுத்த கட்டுரையில்
Show comments