1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (15:31 IST)

’ரஜினியுடன் கூட்டணி’ அதிமுக நிலைபாடு என்ன? ஜெயகுமார் பதில்!

வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என ஓபிஎஸ் கூறியதற்கு ஜெயகுமார் பதில்.
 
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி புதிய கட்சி துவங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும் ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஊழலற்ற, ஜாதி மதச்சார்ப்ற்ற அரசியல் ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் பதிவிட்டிருந்தார்.   
 
இந்நிலையில் இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்த நிலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என தெரிவித்தார். 
 
இது குறித்து இன்று அமைச்சர் ஜெயகுமாரை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஓ.பன்னீர் செல்வம் பேசியது அதிமுகவின் கருத்து அல்ல அது அவரது சொந்த கருத்து என பதிலளித்தார்.