ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (08:32 IST)

அப்ரூவர் ஆகிறாரா ஜாபர் சாதிக்.. பரபரப்பு தகவல்..!

போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கி காவலில் இருக்கும் ஜாபர் சாதிக் அப்ரூவர் ஆகிவிடலாமா என்று ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்த போது அவரது வங்கி கணக்குகளை மையப்படுத்தி பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் ஜாபரின் வங்கி கணக்கில் இருந்து இரண்டு நபர்களுக்கு கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது குறித்து தான் பல கேள்விகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜரான ஜாபர் சாதிக் மனைவி அமீனா மற்றும் அவரது தம்பி சலீம் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் நமக்கு மேலே இருப்பவர்களை காட்டிக் கொடுக்காவிட்டால் இந்த விவகாரத்தில் நமது குடும்பத்திற்கு சிக்கல் ஏற்படும் என்றும் எனவே அப்ரூவர் ஆகிவிடலாம் என்று ஜாபர் சாதிக், மற்றும் அவரது குடும்பத்தினர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva