Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வங்கிக்கணக்குகள் முடக்கம்..!

Written By Mahendran
Updated: சனி, 2 மார்ச் 2024 (16:00 IST)
திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர் போதை மருந்து கடத்தலில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சமீபத்தில் டெல்லியில் போதை மருந்து பிடிபட்டது என்பதும், அதன் காரணமாக மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தான் இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என்பது தெரிய வந்தது. 
 
இந்த நிலையில் ஜாபர் சாதிக் திடீரென குடும்பத்துடன் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது வீட்டை சோதனை செய்த காவல்துறையினர் வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். 
 
இந்த நிலையில் தற்போது ஜாபர் சாதிக் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

நேபாளம் பேரழிவு எதிரொலி.. சீனா கட்டிவரும் அணையால் இந்தியாவுக்கு ஆபத்தா?

29 வயதில் ரிட்டயர்டு ஆன இளம்பெண்.. என்னால் இனிமேல் கார்ப்பரேட்டில் வேலை செய்ய முடியாது...

வெயிட் பண்ணுங்க ப்ரோ.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த பாஜக எம்பி கங்கனா ரனாவத்

அத்திப்பட்டி போல பல கிராமங்களை காணவில்லை.. நேபாளத்தில் வரலாறு காணாத இயற்கை பேரழிவு..

திருவண்ணாமலை கோவிலுக்குள் இனி செல்போன் கொண்டு செல்ல முடியாது.. புதிய கட்டுப்பாடு...

அடுத்த கட்டுரையில்
Show comments