வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (16:16 IST)

கூட்டுங்கடா பேரவைய... பட்டுனு பல்டி அடித்த ஜெ தீபா: அரசியல் பயணம் தொடரும்...

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலிக்கு முழுக்கு போடுவதாக அறிவித்த அந்த பதிவை நீக்கியுள்ளதால் அவரின் அரசியல் பயணம் தொடரும் என தெரிகிறது.  
 
மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் ரத்த வாரிசு என்ற பெயரில் அவரின் அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் செய்த அலப்பறைகள் தமிழக அரசியலில் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைந்தது. 
 
அதிமுகவின் மீது கொண்ட அதிருப்தியால் புதிதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் துவங்கினார் ஜெ தீபா. அதன் பின்னர் இடையில் அதிமுகவில் இணைந்து செயல்பட விரும்புவதாக  எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக ஜெ தீபா தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். இது குறித்து ஜெ தீபா தெரிவித்துள்ளது பின்வருமாறு, எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது. எனது குடும்பம்தான் எனக்கு முக்கியம். குழந்தை பெற்றுக்கொண்டு கணவருடன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை.  
 
எனக்கு அரசியலே வேண்டாம். அதேபோல் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அதிமுகவில் இணையலாம். நான் முழுமையாக பொது வாழக்கையில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்தார். 
ஆனால், தீபாவின் தொண்டர்கள் அரசியலைவிட்டு நீங்க போகக்கூடாது என கேட்டுக்கொண்டதால், நெகிழ்ந்து போனா தீபா தனது பதிவை நீக்கி விட்டார். இதன் மூலம் அவரது அரசியல் பயனம் தொடரும் என நம்பப்படுகிறது.