காந்தி லலித்குமாரை காதலித்ததும், ஊர் சுற்றியதெல்லாம் உண்மைதான்: போலீஸிடம் போட்டு உடைத்த நடிகை நிலானி
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு (நேற்று) செவ்வாய்க்கிழமை வந்த நடிகை நிலானி புகார் மனு ஒன்று கொடுத்தார்.
அப்போது அங்கே இருந்த செய்தியாளர்களிடம் நிலானி கூறியதாவது:
”நான் காந்தி லலித்குமரை காதலிச்சதும், அவருடம் சுற்றியதெல்லாம் உண்மைதான். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த போது அவரது தவறான நடவடிக்கைகளால் பிரிந்து விட்டேன். அவருடன் ஒன்றாக சுற்றிய காலத்தில் ’செல்பி’ எடுத்துக் கொண்டார். அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு என்னை அவமானப்படுத்தினார்.
இதனால் அவரை விட்டு விலகி வந்து விட்டேன். அவர் எனக்கு எந்த செலவும் செய்யவில்லை. நான் தான் அவருக்கு செலவு செய்தேன். அவருடன் ஒன்றாக ஊர் சுற்றவில்லை என்றாலோ, பேசவில்லை என்றாலோ தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவார். இவ்வாறு என்னை 8 முறை மிரட்டி இருக்கிறார்.
அவரது தொல்லைகளை பொறுக்க முடியாமல் தான், நான் போலீஸில் புகார் கொடுத்தேன் அவர் தற்கொலை செய்வார் என்று நான் நினைக்கவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் காந்தி லலித் குமாருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள்,வீடியோ படங்கள் வெளியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.