திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (12:14 IST)

குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி..!

தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ஏவுதளம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறினார்.


இஸ்ரோ தலைவர் சோம்நாத் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த நிலையில் அவர் ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நேற்று கலந்து கொண்டார். இதையடுத்து அவர் இன்று செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய சோம்நாத், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதல்வர் அவர்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. சந்திராயன் 3 மாதிரியை முதலமைச்சருக்கு அன்பளிப்பாக வழங்கினேன்.  குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் 2 ஆண்டுகளில் அமைப்பதில் முதலமைச்சரின் ஆதரவு வழங்க கேட்டுள்ளோம்.  இஸ்ரோ திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முதல்வர் உறுதி அளித்தார்’ என்று கூறினார்.

Edited by Mahendran