செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (17:10 IST)

இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை - ஜே.எம்.பஷீர் காட்டம்!

இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் குற்றச்சாட்டு. 
 
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்த அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீரை கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ், ஈபிஎஸ் உத்தரவிட்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஜே.எம்.பஷீர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இஸ்லாமியர்களுக்கு மரியாதை இல்லை கொடுப்பதில்லை. மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் எடப்பாடிபழனிசாமி என அவர் காட்டமாக கூறியுள்ளார்.