விஜய்யின் கட்சி பெயர் இதுதானா? தீயாய் பரவும் தகவல்!
நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கும் நிலையில் கட்சி பெயர் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியை பதிவு செய்ய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை டெல்லிக்கு அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் கட்சி தொடங்குவதையடுத்து சமூக வலைதளங்களில் விஜய் குறித்த ஹேஷ்டேகுகளும் வைரலாகி வருகின்றன. விஜய் கட்சி தொடங்குவது உறுதி ஆகிவிட்ட நிலையில் கட்சியின் பெயர் என்ன என்பதுதான் பரவலாக பலரின் எதிர்பார்ப்பாகவும் கேள்வியாகவும் உள்ளது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் கட்சி பெயர் இதுதான் என ஒரு பெயரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழக முன்னேற்ற கழகம் (த.மு.க) என்பதுதான் கட்சியின் பெயர் என ட்ரெண்டாகி வருகிறது. மேலும் சிலர் இதே த.மு.க-வை தளபதி முன்னேற்ற கழகம் என்றும் கூறி வருகின்றனர். கட்சி பதிவு வேலைகள் முடிந்ததும் திருச்சி அல்லது மதுரையில் பிரம்மாண்ட கட்சி மாநாடு நடத்தப்பட்டு கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்ட விவரங்களை விஜய் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K