வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 23 நவம்பர் 2018 (18:42 IST)

'நாய் இறைச்சி ’என்று வதந்தி பரப்பியதன் நோக்கம் இதுதானா...?

சென்னை எழும்பூருக்கு வந்த ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என்று வதந்தி பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை இறைச்சி வியாபாரிகள் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளனர்..

 
 
ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பட்ட இறைச்சி ஆட்டு இறைச்சி  என்று நேற்று தான் சென்னை கால்நடை துறை பேராசிரியர்கள் உறுதி செய்தனர்.
இந்நிலையில் இன்று இறைச்சி வியாபாரிகள் சங்கம் இந்த அறிக்கை விடுத்துள்ளது..
 
அதில் கூறப்பட்டுள்ளதாவது :
 
'ஒட்டுமொத்தமாக இறைச்சி விற்பனையை தடுக்க வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் தான் நாய் இறைச்சி என்ற வதந்தி பரப்பப்பட்டுள்ளது.
 
அதனால் தற்போது ஆட்டு இறைச்சியின் விற்பனை படு மந்தமாக உள்ளதாகவும்  சங்கம் வேதனை தெரிவித்துள்ளதுடன், ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என்று வதந்தி பரப்பியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு தெரிவித்துள்ளனர்.