செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (18:00 IST)

ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தமா? அதிகாரி பவித்ரா அதிர்ச்சி தகவல்

ஆர்.கே.நகரில் இந்த முறையும் தேர்தல் நிறுத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் பணம் பட்டுவாடா குறித்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தால் தேர்தலை நிறுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஆர்.கே.நகர் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளரும், மத்திய வருவாய்த்துறை அதிகாரியுமான பவித்ரா கூறியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் மத்திய வருவாய்த்துறை அதிகாரியான பத்ராவை, ஆர்.கே.நகர் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளராக அறிவித்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று டெல்லியில் இருந்து சென்னை வந்த அதிகாரி பவித்ரா, செய்தியாளர்களை சந்தித்தபோது, 'ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் குறித்து அதிகாரிகளுடன்  முதலில் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், அதன்பின்னர் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் கூறினார்.

மேலும் பணப்பட்டுவாடா குறித்து இதுவரை பொதுவான புகார்கள் மட்டுமே வந்து கொண்டிருப்பதாகவும், இருப்பினும் இம்மாதிரியான புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தால், தேர்தலை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார். இதனால் பல லட்சங்கள் செலவு செய்துள்ள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.