செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 11 மே 2021 (08:01 IST)

நியமன எம்.எல்.ஏக்களால் ரெங்கசாமி அரசுக்கு ஆபத்தா? புதுவையில் பரபரப்பு

புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் திமுக 6 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் சுயேட்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி தற்போது ஆட்சி அமைத்துள்ள நிலையில் மூன்று நியமன எம்எல்ஏ மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் மூவருமே பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதால் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சி எப்பொழுது வேண்டுமானாலும் கவிழும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
பாஜக கட்சிக்கு ஏற்கனவே 6 எம்எல்ஏக்கள் இருப்பதால் தற்போது 3 நியமன எம்எல்ஏகளையும் சேர்த்து ஒன்பது எம்எல்ஏவாக பாஜகவினர் உள்ளனர். மேலும் 6 சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் புதுவையில் பாஜக ஆட்சியமைக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே பல மாநிலங்களில் இதே போன்ற நடவடிக்கையை பாஜக எடுத்துள்ளதால் புதுவையிலும் எப்போது வேண்டுமானாலும் பாஜக ஆட்சி மாறும் நிலை உள்ளதாக கூறப்பட்டு வருகிறது