''பேயைவிட மோசமானவரா பிரதமர் மோடி?'' திருச்சி மாநாட்டில் ஆ.ராசா பேச்சு
அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து, இதற்காக ஆளுங்கட்சியான திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் பங்கேற்றுள்ளது.
இந்த நிலையில், திமுக சார்பில் அனைத்து வாக்குச்சாவடிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் மாவட்டங்களை மண்டலங்களாக பிரித்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டது. அதன்படி, டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட வாக்குச்சாவடி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது.
திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்கும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா,
பெண் என்றால் பேய் கூட இரங்கும் பேய் கூட இரங்க வேண்டிய பெண்மைக்காக மோடி இரங்கவில்லை என்றால் பேயைவிட மோசமானவரா என்று கேள்வி இன்றைக்கு இந்தியாவில் எழுந்துள்ளது.
ஒரு பக்கம் ஊழல், இன்னொரு பக்கம் எதேச்சதிகாரம், இன்னொருபக்கம் மதவாதம் இவை இரண்டு சேர்த்து கைகோர்த்து நம்கட்சியைப் பார்த்து, சொல்கிறார்கள். மிசா கொடுமையில் கலைஞர் கோபாலபுரத்தில் இருந்தார். அந்த வீட்டை அடகு வைத்து, மிசாவில் ஜெயில் இருந்த கட்சிக்காரர்களின் வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கு மனைவிமார்களுக்கு ரூ.100 , 200 என்று கலைஞர் தன் சொந்த பணத்தை அனுப்பி வைத்த குடும்பத் தலைவர் கலைஞர் என்று கூறினார்.
மேலும், இந்தப் போர் இந்தியாவின் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுகின்ற போர்… இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஜனநாயகம் , சமத்துவம், சமதர்மம், மதச்சார்பின்னை இத்தனையும் காப்பாற்றுகின்ற போர்…. அரசியல் சட்டத்தை காப்பாற்றுகின்ற ஒரே தத்துவம் தமிழ்நாட்டில்தான் உள்ளது. அந்த தத்துவத்தை தாங்கி நிற்கின்ற இந்த தலைவனை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அவருக்குப் பின் நிற்போம்…இந்திய குடியரசைக் காப்பாற்றுவோம்…. அரசியல் சட்டத்தைக் காப்பாற்றினால்தான் உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும் என்று கூறினார்.