Daily Horoscope
✕

ஏ.ஆர்.முருகதாஸ் கைதா? வீட்டின் முன் போலீஸ் குவிந்ததால் பரபரப்பு

Updated: வெள்ளி, 9 நவம்பர் 2018 (05:44 IST)
நேற்று நள்ளிரவில் சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டின் முன் போலீஸார் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் பிரச்சனை நேற்று உச்சத்திற்கு சென்ற நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். இன்று மதியம் மறு தணிக்கை செய்யப்பட்டு புதிய பொலிவுடன் சர்கார் திரைப்படம் திரையரங்கில் திரையிடப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக வதந்தி பரவியது. இதனை உறுதி செய்வதை போல் அவருடைய சாலிகிராமம் வீட்டின் முன் போலீசார் குவிந்தனர். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தாங்கள் வரவில்லை என்றும், அவருடைய வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவே வந்ததாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ' காவல் துறையினர் எனது வீட்டின் கதவை பலமுறை தட்டினர். நான் தற்போது வீட்டில் இல்லை. தற்போது எந்த காவலரும் எனது வீட்டின் முன்பு இல்லை என  பதிவு செய்துள்ளார்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments