1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 4 ஜனவரி 2025 (15:00 IST)

ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலானாய்வுக்குழு சோதனை.. கைப்பற்றப்பட்ட தொப்பி..!

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் சோதனை செய்து வருவதாகவும், சம்பவத்தின் போது ஞானசேகரன் அணிந்து இருந்த தொப்பியை பறிமுதல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலைக்கழக மாணவியை நேரில் விசாரித்த சிறப்பு விசாரணை குழு, அதன் பின்னர் தற்போது ஞானசேகரன் வீட்டில் விசாரணை செய்து வருகிறது. மாணவி கூறிய தகவல்களின் அடிப்படையில், ஞானசேகரன் சம்பவத்தின் போது தொப்பி அணிந்திருந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த தொப்பி அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
 
ஞானசேகரன் வீட்டில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனைக்கு பின்னர் சில முக்கிய விவரங்கள் வெளியே தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
 
சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே போலீசார் பதிவு செய்த குற்றப்பத்திரிகை, கைதான ஞானசேகரன் குறித்த விவரங்கள், புலனாய்வு விசாரணை விவரங்கள், ஆவணங்கள், தடயங்கள் ஆகியவை சிறப்பு பொருளாதார ஆய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Mahendran