பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? சென்னை ஐகோர்ட்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியல் ஆக்குவது ஏன் என சென்னை ஐகோர்ட் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த நிலையில் இந்த விவகாரத்தை சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திவரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன் என்று அரசியல் கட்சிகளுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்ட களங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்து, போராட்டத்திற்கு அனுமதி தர வேண்டும் என்ற பாமகவின் மனுவையும் அவர் தள்ளுபடி செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran