1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 23 அக்டோபர் 2021 (15:34 IST)

ஓரிரு வாரங்களில்' வலிமை' அறிமுகம்!

தமிழகத்தில் சிமெண்ட் விலையைக் குறைக்க தமிழக அரசு தொடந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் சிமெண்ட் விலை உயர்ந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தார். பின்னர், சிமெண்ட் நிறுவனங்களுடன் அரசு பேசியது. அதனால் சிமெண் விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலயில் கடந்த வாரத்தில் மீண்டும் சிமெண்ட் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஓரிரு வாரங்களில் டான்செம் நிறுவனம் வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்ட் அறிமுகம் செய்யவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.