அமமுக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி - டிடிவி தினகரன்
வரும் உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்சி சுயேட்சையாக போட்டியிடும் என பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு ஆதலால், அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் செய்கின்றன.ஆனால் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அமமுக தயார் ஆகி விட்டன என தெரிவித்துள்ளார்.