செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (16:25 IST)

வெள்ளம் வரும் போது உதவும் வீட்டு காப்பீடு.. எப்படி எடுப்பது?

மனிதர்களுக்கு லைஃப் இன்சூரன்ஸ் இருப்பது போலவே வீடுகளுக்கும் காப்பீடு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. வெள்ளம், தீ விபத்து, பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் காரணமாக வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தால் அதற்கும் காப்பீடு உண்டு. அதுதான் வீட்டு காப்பீடு. 
 
சொந்த வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி வாடகை வீட்டில் உள்ளவர்களும் இந்த காப்பீடு எடுக்க முடியும். இந்த காப்பீடு எடுத்தவர்கள் இயற்கை பேரழிவு மற்றும் எதிர்பாராத விபத்து ஏற்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தால் அதற்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டு தொகையை தந்துவிடும். 
 
நகைகள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் இதர பொருட்களுக்கும் இந்த காப்பீடு கவரேஜில் வரும்.  ஒட்டுமொத்த வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் சேர்த்தும் காப்பீடு எடுக்கலாம். எந்தெந்த கவரேஜ் இருந்தால் எவ்வளவு பாலிசித்தொகை என்பதை அறிந்து நமது வீட்டில் உள்ள பொருட்களுக்கு ஏற்றவாரு காப்பீடு செய்து கொண்டால் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் வரும்போது நமது பொருள்கள் சேதமடைந்தாலும் அதற்கான காப்பீட்டுத் தொகை கிடைத்துவிடும். 
 
எனவே லைப் இன்சூரன்ஸ், கார் இன்சூரன்ஸ், பைக் இன்சூரன்ஸ் போல வெள்ளம் அதிகம் வரும் இடங்களில் வீட்டு பொருட்களுக்கான இன்சூரன்ஸ் செய்து கொள்வது பாதுகாப்பானதாகும்.
 
Edited by Mahendran