1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (16:17 IST)

’’சதுரங்க வேட்டை’’ பட பாணியில் ஆசையை தூண்டி நூதன மோசடி

சில வருடங்களுக்கு தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி பெற்ற படம் சதுரங்க வேட்டை. இந்தப் படத்தில் அடுத்தவர்களின் ஆசையை தூண்டி மோசடி செய்வது போல் கட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் தற்போது அதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது..

திருச்சி மாவட்டத்தில் சில ஆசிரியர்கள் இணைந்து ஒரு வாட்ஸ் ஆப் குரூப் வைத்துள்ளனர். அதில் யுவர் செஃப்ப் மைக்ரோ பைனான்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சமீபத்தில் ஒரு ஆடியோ வாய்ஸ் வந்துள்ளது.

அந்த ஆடியோவில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் தினமும் ரூ500 வட்டியாகவும்,  10 மாதம் முடிந்ததும் மொத்த பணமும் திருப்பித் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
சில ஆசிரியர்கள் இதை நம்பி இதில் பணம் செலுத்தியுள்ளனர். தொடக்கத்தில் சரியாக வட்டி கொடுத்து வந்த அந்த அமைப்பினர் திடீரென்று பணம் கொடுக்காமல் நிறுத்தியதுடன்  பணத்தையும் தரவில்லை என தெரிகிறது.

இதனால் சுதாரித்துக் கொண்ட ஆசிரியர்கள் தங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். பின், தாங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததுதன் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.