வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (08:29 IST)

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் 112% வரை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை 88 சதவீத முதல் 112 சதவீதம் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
 
சமீபத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தனது இயல்பான அளவில் இருந்து 94 சதவீதம் மழை பெய்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வடகிழக்கு பருவ மழையும் தனது இயல்பான அளவில் அல்லது அதைவிட அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
 
குறிப்பாக தமிழ்நாடு  மற்றும் கடலோர ஆந்திராவில் 88% சதவீதம் முதல் 112% வரை மழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva