இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தஞ்சாவூரில் திறப்பு!
இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தஞ்சாவூரில் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உணவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வருகின்றனர்
இந்திய உணவு கழகம் சார்பில் இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தஞ்சாவூரில் திறக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொளி மூலம் திறந்து வைத்தார்
மும்பையிலிருந்து அமைச்சர் திறந்து வைத்த இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் விரும்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே முதல் உணவு அருங்காட்சியகம் தமிழகத்தில் அதுவும் தஞ்சாவூரில் திறக்கப்பட்டுள்ளது அம்மாவட்ட மக்களுக்கு பெருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது