செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 மே 2023 (12:12 IST)

வழக்குப்பதிவு செய்தால் பயந்து விடுவோமா? வருமான வரித்துறை அதிகாரி ஆவேசம்..!

எங்கள் மீது வழக்கு பதிவு செய்தால் நாங்கள் பயந்து விடுவோம் என திமுகவினர் நினைக்கின்றனர், ஆனால் அது நடக்காது என வருமானவரித்துறை அதிகாரி சிவசங்கரன் தெரிவித்துள்ளார். 
 
கரூரில் சமீபத்தில் வருமானவரி சோதனையை செய்ய சென்ற வருமானவரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தாக்கியதாக குற்றம் தாட்டப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வருமானவரித்துறை இயக்குனர் சிவசங்கரன் பேசியபோது எங்கள் அதிகாரிகள் நான்கு பேர் திமுகவினரால் தாக்கப்பட்டனர். ஒரு பெண் அதிகாரியும் தாக்கப்பட்டதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 
 
தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன, அதை காவல்துறையிடம் அளித்துள்ளோம். எங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தால் பயந்து விடுவோம் என திமுகவினார் நினைக்கின்றனர்
 
எங்கள் தேடல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது, எங்கள் சோதனையின் முடிந்த பிறகு நாங்கள் கண்டுபிடித்த ஆதாரங்களை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran