ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2016 (17:46 IST)

சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை பாரிமுனையில் உள்ள நகை கடைகள் மற்றும் ஹவாலா பரிமாற்றத்தில் தொடர்புடையவர்கள் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு திடீரென்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அதிரடியாய் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கோள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து நேற்று முதல் மக்கள் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இதன்மூலம் வரி செலுத்தாமல் கணக்கில் வராத பணங்களை மாற்றும் போது அவர்கள் மாட்டிக் கொள்வார்கள். 
 
இதனால் பலர் ரூபாய் நோட்டுகளை மூட்டையக மூட்டையாக குப்பைகளில் தூக்கி போட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
 
பாரிமுனையில் உள்ள நகை கடைகளிலும், ஹவாலா ஹவாலா பரிமாற்றத்தில் தொடர்புடையவர்கள் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.