வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 7 மார்ச் 2021 (12:09 IST)

லலிதா ஜுவல்லரியில் வருமான வரித்துறை சோதனை...ரூ.1000 கோடி கண்டுபிடிப்பு

சென்னை லலிதா ஜுவல்லரியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.1000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரபலமான நகைக்கடை நிறுவனம் லலிதா ஜுவல்லரி. இக்கடைக்கு பல மாவட்டங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளது.

இந்நிலையில் இக்கடையில் கடந்த மார்ச் 4ஆம் தேதி வருவமான வரித்துறையின் சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத சுமார் 1.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் லலிதா ஜுவல்லரில் வருமான வரித்துறையின நடத்திய சோதனைகள் சுமார் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.