செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (20:34 IST)

கரூரில் பந்தன் வங்கி திறப்பு விழா

bandhan bank
கரூர் ஜவகர் பஜாரில் அம்மா மருந்தகம் எதிரே அமைந்துள்ள பந்தன் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
 
மேற்கு வங்காளம் மாநிலம்,  கொல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பந்தன் வங்கியின் 1640 வது கிளையாக கரூரில் பந்தன் வங்கி கிளை திறக்கப்பட்டுள்ளது.
 
வெள்ளிக்கிழமை இன்று காலை, வங்கிக் கிளையினை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றையும் துவக்கி வைத்தார். வங்கியின் கரூர் கிளை மேலாளர் இளஞ்செழியன் தலைமை வகித்தார்.  மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், தொழிலதிபர்கள், வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் கரூர் பந்தன் வங்கி அதிகாரிகள்,  அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டு திறப்பு விழா நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்