1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (11:53 IST)

ஐந்து ஆண்டுகளில் திருமாவளவனின் சொத்து மதிப்பு உயர்ந்தது இவ்வளவுதான்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்- திருமாவளவன் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில் 48, 851 ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது 
 
சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 
அதில் தொல். திருமாவளவன் தற்போது 2019ம் ஆண்டில் அவருக்கு
அசையும் சொத்துக்களாக 58 லட்சத்து 71 ஆயிரத்து 292 ரூபாயும் 
அசையா சொத்துக்களாக 18 லட்சத்து 27 ஆயிரத்து 800 ரூபாயும் கடனாக 3 லட்சத்து 94 ஆயிரத்து 248 ரூபாயும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
இதில் அசையா சொத்தின் பூர்வீக தற்போதைய சந்தை மதிப்பு 25 லட்சத்து 77 ஆயிரத்து 800 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
இதில் 2014 ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்ட போது அசையும் சொத்து மதிப்பு ஆக  58 லட்சத்து 22 ஆயிரத்து 441 ரூபாய் ஆகவும்  அசையா சொத்துக்களின் மதிப்பு 18 லட்சத்து 27 ஆயிரத்து எட்டு நூறு என்றும் இதன் சந்தை மதிப்பு 25 லட்சத்து 77 ஆயிரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
14 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் உள்ளதாகவும் இதில் அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி ஒரு லட்சத்து 60 ஆயிரம் 119 ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இதன்படி திருமாவளவனின் 5 ஆண்டுகளில் சொத்தின் மதிப்பு  48 ஆயிரத்து 851
ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.