1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 மார்ச் 2019 (17:14 IST)

பொள்ளாச்சியில் பார் நாகராஜ் கடையை அடித்து நொறுக்கியவர்கள் கைது

சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்து வழக்கில் இதுவரை திருநாவுக்கரசு, சபரிராஜ், வசந்தகுமார் ஆகிய  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது பற்றி புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க சிபிசிஐடி போலிஸார் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
 
அதில் , பாதிக்கப்பட்ட பெண்கள் கோவையில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் அளிக்கலாம் என்றும், இதுசம்பந்தமாக தங்களுக்கு தெரிந்த தகவலை தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
இவ்வழக்கு சம்பந்தமாக, இதில் தொடர்புடைய எதிரிகளால் பாதிக்கப்பட்டோர் : [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு தெரிந்த தகவலை தெரிவிக்கலாம். வழக்கு தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்களை 9488442993 ல் தெரிவிக்கலாம் என்றும், வழக்கின் முக்கியத்துவம் கருதி பாதிக்கப்பட்டவர்களின் நனம் கருதி புகைப்படம் வீடியோ வெளியிட வேண்டாம் என்றும் சிபிசிஐடி கேட்டுக்கொண்டுள்ளது.
 
தகவல் தரவேண்டிய முகவரி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை , நெ. 800, அவினாசி ரோடு. என்ற முகவரியிலும் புகார் மற்றும் தகவல்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் பார் நாகராஜ் அடிதடி வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இவருக்கு ஜாமீன் தரப்பட்டது. இந்நிலையில் நேற்று பொள்ளாச்சியில் உள்ள பார் நாகராஜின் கடையை  சிலர் அடித்து நொறுக்கினர். இந்தக் காட்சி அனைத்து சேனல்களிலும் வெளியானது.
இன்று நாகராஜன் நான் அவன் அல்ல என்று பேசும் வீடியோவை வெளியிட்டார். இந்நிலையில் பார் நாகராஜின் கடையை அடித்து நொறுக்கிய 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.