பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன்
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைப்பதில்லை. ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் உடனே விலை உயர்த்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
மத்திய பாஜக அரசு இதனைக் கண்டு கொள்வதில்லை. இது பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்துகிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து பொது மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இந்த விலை உயர்வினால் சரக்குக் கட்டணம், விலைவாசி மேலும் உயரும். ஏற்கனவே, விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு கூடுதல் மேலும், சுமையை ஏற்படுத்தும்.
எனவே, மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.