திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2018 (11:00 IST)

அன்பெனும் மழையில் நனைந்தேன் - இளையராஜா நெகிழ்ச்சி

பத்மவிபூஷன் விருது தனக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தன்னை வாழ்த்திய நபர்களுக்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

 
நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது இளையராஜாவிற்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இசை துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் “எனக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து இன்று வரை என்னை நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த உலகெங்கிலும் பரவியிருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில் துறையினர், மீடியா அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
 
இந்த வாழ்த்தும், உங்களின் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தைத் தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது. ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும் மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டிருப்பேன். அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.