செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (09:41 IST)

திருடனையும், ஹெச்.ராஜாவையும் ஒன்றாக பார்த்தால்? - இளங்கோவன் கலகல பேட்டி

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பற்றி தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
செய்தியாளர் பேட்டிகளிலும், தனது டிவிட்டர் பக்கத்திலும் ஹெச்.ராஜா தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளையே கூறி வருகிறார். பெரியார் பற்றி அவர் தெரிவித்த கருத்து தமிழகமெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பு அவர் அதற்கு வருத்தம் தெரிவித்தார்.
 
இந்நிலையில், மயிலாடுதுறையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் “காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை ஏமாற்றி வருகிறது. மூன்று வார காலத்திற்குள் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தமிழிசை கூறியுள்ளார். பொய் சொல்வதே அவர்களுக்கு வழக்கமாகி விட்டது. ஐ.பி.எல் போட்டியை நிறுத்த வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. 
 
பெரியார் சிலை உடைப்பு விவகாரத்துக்கு பின் தமிழக மக்கள் திருடனையும், ஹெச்.ராஜாவையும் பார்த்தால், திருடனை விட்டுவிட்டு ஹெச்.ராஜாவை உதைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர். காவிரி விவகாரத்தில் ராகுல்காந்தி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என அவர் தெரிவித்தார்.