1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (11:22 IST)

மாநிலங்களவைக்கே செல்லாத இளையராஜா! குளிர்கால கூட்டத்தொடர் விவரம்!

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை நியமன எம்.பியாக நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவைக்கே செல்லவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மாநிலங்களவை நியமன எம்.பிக்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் தடகள வீராங்கனை பிடி உஷா, இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நியமன எம்.பிகளில் பதவியேற்பு விழாவுக்கே இளையராஜா செல்லாமல் இருந்தது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது குளிர்கால கூட்டத்தொடரின் வருகை பதிவு விவரங்கள் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 7 முதல் 23 வரை 13 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் மாநிலங்களை நியமன எம்.பியான பி.டி.உஷா 13 நாட்களும் கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார். விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும், வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா ஒருமுறை கூட கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.

Edit By Prasanth.K