1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (18:05 IST)

சீமான் கைதா? சுற்றி வளைத்த அதிரடிப்படை

நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் இடையே திடீரென போலீசார் தடியடி நடத்தியதும், சீருடை அணிந்த போலீசார்களை நாம் தமிழர் கட்சியினர்கள் தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றது.
 
இதனையடுத்து சீமான் மீது கொலை முயற்சி உள்பட 10 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால் எந்த நேரமும் சீமான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தபோது சீமானும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சீமான் பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இந்த மண்டபத்தை தற்போது அதிரடிப்படை சுற்றி வளைத்துள்ளது. சீமானின் வழக்கறிஞருக்கு கூட திருமண மண்டபத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இன்னும் சில நிமிடங்களில் சீமான் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.