வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (16:52 IST)

மற்றவர்கள் வந்தால் அக்செப்ட் !தினகரனுக்கு மட்டும் கெட் அவுட் : வைத்தியலிங்கம்

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோர் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் இடைத்தேர்தல் சம்பந்தமாக 18 தொகுதிகளுக்கும்  பொறுப்பாளர்களை நியமனம் செய்தனர்.
அதன் பின் கட்சியின் ஆலோச்னைக்கூடமும் நடைபெற்றது.அப்போது கே.பி.முனிசாமி ,வைத்தியலிங்கம் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 
இந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்க்ளுக்கு பேட்டி அளித்த வத்தியலிங்கம் கூறியதாவது:
 
அதிமுக கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்ப  வந்தால் ஏற்றுக்கொள்வோம்.ஆனால் தினகரனை மட்டும் சேர்த்துக்கொள்ள மாட்டோம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
இது குறித்து தினகரன் கருத்து எதுவும் தெரிவிப்பாரா என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.