ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 மார்ச் 2024 (14:09 IST)

’என் மகனுக்கு சீட்’ என சீமான் கூறியது குறித்து இடும்பாவனம் கார்த்திக் விளக்கம்!

Seeman
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த போது அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் இளைஞரை களம் இறக்க போகிறேன் என்றும் நான் ஒருவன் தான் அந்த கூட்டத்தில் மூத்தவனாக இருப்பேன் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் மூத்த மகனுக்கு அடுத்த முறை தேர்தலில் நிற்க சீட் தரப் போகிறேன் என்றும் அவனும் சரி என்று சொல்லி விட்டான் என்று சீமான் கூறியதாக ஊடகங்களின் செய்தி வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள சீமான் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக் ’சீமான் மேடையில் என் மகன் என்று கூறியது அவருடைய மகனை அல்ல, ஹிமாயின் மகன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் ஊடகங்கள் மொட்டையாக எனது பெரிய மகன் என்று செய்தியாக திரித்து எழுதி உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் 2026 தேர்தலில் 117 பெண்கள் மற்றும் 117 ஆண்களை களத்தில் இறக்க போவதாகவும், அதில் என்னை தவிர எல்லோருமே இளைஞர்கள் என்று சீமான் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva