1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (10:38 IST)

கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை - திருமாவளவன்

காவிரிக்காக கமல்ஹாசன் ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இதற்கு காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்று பெயரிடப்பட்டுள்ளன.  இந்த கூட்டத்தில் பங்கேற்க விஜயகாந்த், தமிழிசை, டிடிவி தினகரன், வேல்முருகன், ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோருக்கு கமல் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், காவிரிக்காக கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் நான் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்தார். கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு தொலைபேசி மூலமாகவும் நேரிலும் கடிதம் வழங்கப்பட்டது என்றார்.
ஆனால் இக்கூட்டத்தில் தோழமை கட்சிகள் சார்பில் யாரும் கலந்து கொள்ள போவதில்லை என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறிள்ளார். அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்க போவதில்லை. அதற்காக வருந்துகிறேன் என திருமாவளவன் கூறியுள்ளார்.